2021/09/24

எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு தாமதமாவதற்கு என்ன காரணம்....




தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அந்தந்த பகுதி நிலவரங்கள், பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிக்கை ஒன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. 


அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், பிற துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்கும் என கூறப்பட்டது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் தமிழக அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை இந்நிலையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் ” என்று கூறினார்.

No comments:

Post a Comment