ஐபிஎல் 14ஆவது சீசன் 35ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.
14ஆவது சீசனின் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில், ஆர்சிபி அணி கொல்கத்தாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபியில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக படிக்கல் 22 ரன்கள் சேர்த்தார். டிவிலியர்ஸ் கோல்டன் டக் ஆன நிலையில், கோலி (5), மேக்ஸ்வெல் (10) போன்றவர்களும் படுமோசமாகச் சொதப்பினார்கள். இதனால், அந்த அணி 19 ஓவர்களில் 92/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்நிலையில் முதல் போட்டியில் படுசோமாக தோற்ற நிலையில், இன்று சிஎஸ்கேவுக்கு எதிராக தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மைதானமும் சாதகமாக இருக்கிறது. ஆம், போட்டி ஷார்ஜாவில்தான் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் அளவில் சிறியது என்பதால் சிக்ஸர்களை அசால்ட்டாக பறக்கவிட முடியும். கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இதனை பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷார்ஜா அளவில் சிறியதாக இருப்பதால், இன்று ஆர்சிபி கேப்டன் கோலி சுலபமாக அரை சதம் அடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இவர் 66 ரன்கள்வரை அடிக்கும் பட்சத்தில் வரலாற்றுச் சாதனை படைக்க முடியும். டி20 கிரிக்கெட்டில் கோலி தற்போதுவரை 9,933 ரன்கள் அடித்துள்ளார். கூடுதலாக 66 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், டி20 வரலாற்றில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியராக இருப்பார். உலக அளவில் கெய்ல் 14,261 ரன்கள் குவித்திருக்கிறார். இந்நிலையில், கோலி 66 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், அவர்தான் இந்தியாவின் கிறிஸ் கெய்லாக இருப்பார். இன்றைய போட்டியில் இல்லாவிட்டாலும், அடுத்த போட்டியிலாவது இந்த சாதனையைக் கோலி எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment