2019/08/02

சினிமா விமர்சனம் -கழுகு 2-

Image result for கழுகு 2

கடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. 
Image result for கழுகு 2

செந்நாய் உலவும் காட்டை ஏலம் எடுப்பவர் அங்கே வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் துப்பாக்கி சுடும் வேட்டையாளை வேலைக்கு வைக்க விருப்பப்படுகிறார். அதற்காக தேனியில் திருட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் , போலீஸ் துப்பாக்கியை திருடி ஓடும்போது பார்க்கும் எம் எஸ் பாஸ்கர் அவர்களை வேட்டையாள் என நினைத்து காட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த காட்டில் அவர்கள் பிழைத்தார்களா? அங்கே கிருஶ்ணாவுக்கு ஏற்படும் காதல், திருட்டு அவர்கள் வாழவை எப்படி பாதிக்கிறது என்பதே கதை. 

ஆனால் கழுகு ஈர்த்த அளவு இல்லாமல் சராசரியான முயற்சியாக முடிந்து விடுகிறது. முழுப்படமும் காட்டுக்குள் நடப்பதால் காட்டின் பிரமாண்டம் படத்திற்குள்ளும் வந்து விடுகிறது. செந்நாய் கூட்டம் உலவும் காடு எனும் பில்டப்பில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டு காட்சிகளுக்கு பிறகு செந்நாய் காணாமல் போய் விடுகிறது. பிந்து மாதவிக்கும் கிருஷ்ணாவுக்குமான காதல் தான் படத்தின் அடிநாதம் இருவரின் கெமிஸ்ட்ரியும் அழகாக இருக்கிறது. அவர்களுக்கு காதல் ஏற்படும் காரண காரியங்கள் ஒட்டவே இல்லை. மேலும் கழுகு படத்தில் பார்த்த அதே காதல் காட்சிகள் பல இடங்களில் ரிலீஸ் மோட் ஆகிறது. 

Image result for கழுகு 2
காளிவெங்கட் என்ன மாதிரியான பாத்திரம் என்பதற்கு எந்த விளக்கங்களும் இல்லை. திடீர் திடீரென அந்த கேரக்டர் மாறுவது லாஜிக் சொதப்பல். படம் எதை நோக்கி பயணிக்கிறது என்கிற குழப்பம் படத்தின் பாதியில் வந்து விடுகிறது. காதலை சொல்லிக்கொண்டிருக்கும் திடீரென டிராக் மாறி திருட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இப்படி படத்தில் நம்மை குழப்பும் விசயங்கள் அதிகம். கிருஷ்ணாபிந்து மாதவி இருவரும் கழுகு படத்தை பிரதிபலித்திருகிறார்கள். ஆழமில்லாத கேரக்டருக்கு நிறைய உழைத்திருப்பது ஃபிரேமில் தெரிகிறது.

No comments:

Post a Comment