2019/08/03

அத்தி வரதராஜ பெருமாளின் புராண கதையும், சிறப்புகளும்.......



Image result for அத்தி வரதராஜ பெருமாளின்





நாம் அனைவரும் வியப்பாக தற்போது பார்த்து வரும் கோயில்களில் ஒன்றாக மாறி உள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். இங்குள்ள அத்தி வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் உருவாக்கினார். அவர் தற்போது திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் மூலவராக இருக்கும் வரதராஜ பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவர் பழைய சீவிரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தேவராஜ பெருமாள் என கூறப்படுகின்றது. 

Image result for Athi Varadar Darshan

ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு. ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைப்பெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்கு சரஸ்வதி தேவியை அழைக்காததால், துனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள். பிரம்ம தேவனின் யாகத்தை காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியை தடுத்து பிரம்மனின் யாகத்தை காப்பாற்றினார். 

யாகத்தை காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயர் வந்தது. மரத்தால் ஆன வரதராஜ பெருமாள் சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததார். அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். 

Image result for அத்தி வரதராஜ பெருமாளின்

மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரத ராஜ பெருமாளை முன்னிருத்தி யாகத்தை நடத்தினார். 
அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையை பாதித்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன், நான் என்ன செய்வது என பெருமாளை வேண்டினார். பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர் விக்க கோயிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். பிரம்மனுக்கு பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.  வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரத பெருமாள் 24 நாட்கள் சயன வடிவிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்பதால், வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் அலை மோதுவார்கள். இரண்டவாது முறையாக இந்த பெருமாளை தரிசித்தால் வைகுண்ட பதவி பெறுவார்கள் என்பது ஐதீகம். 






No comments:

Post a Comment