2019/07/31

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்......

Image may contain: one or more people and outdoor
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2019) இடம்பெற்றது.வள்ளி, தெய்வானை சமேதராக சண்முகப்பெருமான் விநாயகப் பெருமானுடன் உள்வீதியுலா வந்து பகல் 11 மணியளவில் புதிய திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் 45 உயரமான முகஉத்தர சண்முகர் திருத்தேர் புதிதாக அமைக்கப்பெற்று நேற்றைய தினம் வெள்ளோட்டம் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.29 ஆண்டுகளின் பின்னர் சண்முகப்பெருமான் உத்தரத்தேரில் பவனிவருவதைக் காண உள்நாடு, வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment