2019/07/21

சினிமா விமர்சனம் -ஆடை-

Related image

சுதந்திரக்கொடியாக இருந்தாலும் அதன் சுதந்திரம் கொடிக்கம்பம் வரை தான். கிடைத்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் கரு     அதை    மாடர்ன்    உலகில் ஃபெமினிசம்   பேசும்    ஆடையின் வழு சொல்லியிருக்கிறது. 
Image result for aadai movie review


அமலா பால் டீவி  நிறுவனத்தில்   வேலை   செய்யும் மாடர்ன் பெண். தன் குழுவுடன்     ஃபிராங்க்    விடியோ   செய்து       வருகிறார். தன்னிடம்  பெட் கட்டினால் என்ன வேண்டுமானாலும் செய்யும் கேரக்டர். நிறுவனம் காலி செய்த     கட்டடத்தில்   தன்  நண்பர்களுடன்       தண்ணியடிக்கும்    போது நிர்வாணாமாக     நாள்     முழுதும்     கட்டிடத்திற்குள்   இருப்பதாக     பெட் கட்டுகிறார்.   போதையில்   மறுநாள்   முழு   நிர்வாணமாக   எழும்    அவர் எப்படி கட்டிடத்திற்குள் இருந்து வெளி வருகிறார் என்பது தான் கதை. 

ஆதார கதை ஒரு    வரியில்    இருக்க,     அதை      நுண்ணிய புதிய    வகை திரைக்கதையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத இளம் தலைமுறையின் வாழ்க்கை முறையை பதிவு செய்தது ஓகே. ஆனால்  அதில்     இத்தனை ஆபாசம் தேவையா? .  காமன் சென்ஸ்ஸில் நாம் எங்கோ பின்னுக்கு இருக்கும்போது ஆணும் பெண்னும் சேர்ந்து     தண்ணியடித்து   பேசும்   ஆபாசக் காட்சிகள் தேவையா? எனத் தோணுகிறது.   நோக்கம் என்பது   கேர்லஸ்   இளைய       தலைமுறையை, போனைக் கட்டிக்கொண்டு  அழும் நம்மை  சாடுவது என்றாலும், அதைச் சொல்லவும்          இணைய      டிரெண்டிங்     தேவைப்படுகிறது      என்பதே நிதர்சனம். 

இப்படத்தின்      ஈர்ப்பு      அமாலா   பாலின்     நிர்வாணம் தான்   ஆனால் அந்தக்காட்சிகள்   எந்த   ஆபாசமும்   இல்லாமல்    படபடப்பு      வரும்படி படமாக்கப்பட்டிருக்கிறது. படம் சொல்லும் கருத்து வெகு முக்கியம் தான். அது     தரும்   அறிவுறையும்   முக்கியம்      தான். ஆனால   க்ளைமாக்ஸில் இதற்குத்தானா இத்தனையும் எனும் நினைப்பை உதற முடியவிவில்லை. 

பின்பாதி முழுதும் ஒரு கட்டிடத்திற்குள் ஆனால் அந்த படபடப்பு நமக்குள் பரவும்படி     செய்துள்ளார்கள்.       அதையும் மீறி பின்பாதியின்    நீளமும் அங்கங்கே    இருக்கும் லாஜிக்    சொதப்பல்களும் எப்போது முடியும் என கேட்க வைத்துவிடுகிறது. தேடி வரும் போலீஸிடம் உதவி கேட்டால் முடிந்ததே இப்படி அங்கங்கே தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. படத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் எல்லோரையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். வரம்பு மீறுவது சரிதானா? அதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். 

படமாக ஒரு புதிய , பாரட்டப்பட வேண்டிய முக்கியமான முயற்சி. அதை சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். அதற்காக வாழ்த்தலாம். அமாலா பால் இந்தியாவில் எந்த ஹிரோயினும் செய்ய முடியாத பாத்திரத்தை அனாயசமாக முடித்திருக்கிறார். படம் முடியும் போது அவர் மீதான பார்வையும், மரியாதையும் கூடும். நிர்வாணமாக உடலை மறைக்க அவர் படும் பாடு நமக்குள் கலகத்தை உண்டு பண்ணுகிறது. நடிப்பில் தன் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். 

படத்தின் மேக்கிங் பிரமிக்க வைக்கிறது. காட்சிகள் வழி கதை சொல்லும் கலை ரத்னகுமாருக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள். உணர்வுகளை எளிதில் கடத்தி விடுகிறார். திரைமொழியில் ரசிகனை கட்டுப்படுத்தியுள்ளார். க்ளைமாக்ஸ் மற்றும் பின்பாதி இழுவையை கவனித்திருக்கலாம். 

இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவிற்கு ஒரு ராயல் சல்யூட். சமீப தமிழ் சினிமாவின் தரத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. நிர்வாணத்தை நடிப்பதை விட அதை படம்பிடிப்பது கடினம். கொஞ்சமும் ஆபாசமில்லாமல் அத்தனை அழ்காய் படம்பிடிதிருக்கிறாரகள் விஜய் கார்த்திக் மற்றும் கண்ணன். எடிட்டிங் கட்கள் ஒரு காட்சிக்குள்ளாக இருக்கும் பொருளிலிருந்து கொண்டே அடுத்த காட்சிக்குள் நுழைவது அழகு. ஷாஃபிக் முகம்மது அலி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கவனிக்கப்படுவார். பிரதீப் குமார் இசை படபடப்பை கூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆடை சமூகத்திற்கு தேவையான முயற்சி. 

No comments:

Post a Comment