2021/09/29

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் ரயில் சேவைகள் இடம்பெறாது! - அரசாங்கம் அறிவிப்பு

 


 தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், பொதுப்போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரண்டு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொது சேவையை வழமைபோன்று செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Janaka Bandara Tennakoon) தெரிவித்துள்ளார். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment