நாட்டை திறந்த பின்னர் ஐந்தாவது கொவிட் அலை உருவாகுவதனை தடுப்பதற்காக பொது போக்குவரத்தினை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்து மிகவும் முக்கியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார்.
அதற்காக உரிய பிரிவுகள் கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சங்கத்தின் ஊடக குழு உறு்பபினரான வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்று 4000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட கால பகுதி ஒன்றை நாங்கள் பார்த்தோம். பாரிய மரணங்கள் ஏற்பட்டு வந்ததமையும் அவதானித்தோம். எனினும் தற்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பாரிய அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் நாட்டை திறப்பதே சரியான தீர்மானமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு அதிகமாக நாட்டை மூடி வைத்துள்ளோம். எனினும் அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் பாரிய நெருக்கடியை சந்தித்தார்கள். இந்த நிலையில் நாட்டை திறந்தவுடன் மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சரியான முறையில் செயற்பட வேண்டும்.
இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதனை விடவும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை மூடி வைத்து மக்கள் கூடுவதனை தவிர்க்க வேண்டும்.
இரவு நேர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிக மக்கள் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதில் பயனில்லை. அதற்கு பதிலாக இரவில் இளைஞர்கள் ஒன்றுக்கூடும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை மூடி வைப்பதற்கே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment