2021/09/14

திருப்பதி கோபுரத்தில் இப்படியொரு மாற்றம்.....


முன்னதாக 1972ஆம் ஆண்டு கோவிந்தராஜா கோயிலின் விமான கோபுரத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு அடுத்தகட்டமாக புதுப்பிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக 100 கிலோ தங்கமும், 4,300 கிலோ காப்பர் என மொத்தம் 32 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவு பெறும். அதேசமயம் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் இல்லை. அனைத்து பூஜைகளும் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

No comments:

Post a Comment