2021/09/15

இந்த ஜூஸ் குடிச்சிருக்கீங்களா?...

 

பழங்களின் ராஜா என அழைக்கப்படும் வில்வ பழத்தின் மூலம் அதிக உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இதனை ’வுட் ஆப்பிள்’ என்று நாம் அழைக்கிறோம்.

குறிப்பாக, கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தினை ஜூஸ் போட்டு குடித்தால் இன்னும் சுவையாக இருக்கும். உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்த தேர்வாகும். அட என போட வைக்கும் இந்த பழத்தில் உள்ள பல்வேறு பலன்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்த நான்கு காரணங்களுக்காக நீங்கள் இந்த பழத்தினை தினமும் எடுத்துக் கொள்ளலாம் இந்த பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான பைபர் சத்து காரணமாக உடலில் செரிமான தன்மையை அதிகப்படுத்தி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உங்களுக்கு கொழுப்பு உடலில் சேராத அளவிற்கு இது பார்த்துக் கொள்கிறது. எனவே, தொப்பை வருமென்று தயங்குபவர்கள் இந்த பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஜூஸானது கோடைக் காலத்தில் உடலை குளிர்விப்பதற்கு இந்த ஜூஸ் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல், இவற்றில் இருக்கக் கூடிய இயற்கையான இனிப்பு சுவையின் காரணமாக உடல் எடை குறைப்புக்கு அவை பயன்படுகிறது. நீங்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள், இனிப்பு சுவை உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிந்து வைத்திருப்பீர்கள்.

நீங்கள் ஜூஸ் போடும் பொழுது இந்தப் பழத்திற்கு கூடுதலாக கொஞ்சம் ஸ்பூனில் இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியமே தேவையில்லாதது அந்த அளவிற்கு இவை இனிப்பாக இருக்கும். அதன் காரணமாக உடலில் கலோரிகள் ல் குறைந்து உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும். உடல் எடை குறைப்பிற்காக நன்றாக உடற்பயிற்சி செய்த பிறகு உடலில் ஆற்றலை அதிகரிப்பதற்காக கொஞ்சமே கொஞ்சம் எனர்ஜி ட்ரிங்க் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? இந்த வில்வ பழ ஜூஸ் தான் உங்களுக்கு சரியான தீர்வு. இதில் இருக்கக்கூடிய பைபர் சத்து காரணமாக உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 250 மில்லி ஜூஸ் நீங்கள் குடித்தால் 140 முதல் 150 கலோரிகள் மட்டுமே இதில் உருவாகும். ஆனால், நீங்கள் எனர்ஜி தரக்கூடிய வேறு ஜூஸ்களை குடித்தால் அவை பல்வேறு கலோரிகள் கொண்டது. அது உடல் எடை குறைக்க உதவாது. எனவே, இந்த வில்வ பழ ஜூஸ் ஆனது சரியான தீர்வாகும்.



No comments:

Post a Comment