2021/09/24

கோவிட் தொற்று காரணமாக பலியான இளம் பெண் மருத்துவர்.....


தொற்று காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

கோவிட் நிமோனியா காரணமாக ஏற்பட்ட உடல் உறுப்புகள் செயலிழப்பு மருத்துவரின் மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நரிந்தி தில்ஷீகா விதானகே என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு இரத்தமலானை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் மருத்துவர் வைத்தியசாலையில் சேவையாற்றி நிலையில், கடந்த மாதம் தனியார் மருத்துவமனை ஒன்றில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

பரிசோதனைக்கு அமைய அவருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் சேவையாற்றிய வைத்தியசாலையில் கோவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த போது, சுகவீன நிலைமை அதிகரித்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 2 ஆம் திகதி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு எக்மோ இயந்திரத்தை சம்பந்தப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.


 

No comments:

Post a Comment