வெளியான 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றிய 188 மாணவர்களில் 182 பேர் உயர் தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் வெளியான பெறுபேற்றில் 21 பேர் அதி உயர் சித்தியினை அதாவது A சித்தியினை பெற்றுள்ளதாகக் கல்லூரியின் அதிபர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி நகரில் அமைந்துள்ளதனால் கோவிட் தொற்று பரவல் காரணமாக பல்வேறு சுகாதார நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு பல சிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களைப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டன.
இருப்பினும் இந்த கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 10 பாடங்களில் 100 சதவீதமான பெறுபேறுகளையும், கணித பாடத்தில் 188 பேர் தோற்றி 104 A சித்தியினையும், ஆங்கில இலக்கியத்தில் 44 பேர் தோற்றி 42 பேர் சித்தி பெற்றுள்ளனர்.
ஆங்கில பாடத்தில் 99 பேரும், எல்லாப்பாடங்களிலும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 97 சதவீதம் சித்தி பெற்றுள்ளனர். இந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் கல்விப் புலம் சார்ந்த அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த கல்லூரியிலிருந்து இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 141 பேர் சைவசமய பாடத்திற்குத் தோற்றி அதில் 141 பேர் சித்தி பெற்றுள்ளனர். இவர்களில் A சித்தியினை 82 பேரும், B சித்தியினை 22 பேரும், C சித்தியினை 20 பேரும் பெற்று, 99.3 சதவீதமான மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழியில் 188 பேர் பரீட்சைக்குத் தோற்றி 188 பேரும் சித்தி பெற்றுள்ளனர். இதில் 103 பேர் A சித்தியினையும், 43 பேர் B சித்தியினையும், 37 பேர் C சித்தியினையும் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 188 பேர் தோற்றி 186 பேர் சித்தி பெற்றுள்ளனர்.
இதில் 82 A சித்தியினையும், B சித்தியினை 36 பேரும், C சித்தியினை 58 பேரும் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 188 பேர் தோற்றி 182 பேர் சித்தி பெற்றுள்ளனர். இதில் 104 பேர் A சித்தியினையும் 26 பேர் B சித்தியினையும், 38 பேர் C சித்தியினையும் பெற்றுள்ளனர்.
விஞ்ஞான பாடத்தில் 182 பேர் சித்தி பெற்றுள்ளதுடன் அதில் A, B, C சித்திகளை முறையே 44,42,65 பேர் பெற்றுள்ளனர். இதே போன்று பாடசாலையில் தோற்றிய மாணவர்கள் சித்திரம், குடியுரிமை, புவியியல், உடற்கல்வி சுகாதாரமும், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், உள்ளிட்ட பாடங்களில் 100 சதவீத பெறுபேறுகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் செயல் முறை பரீட்சை பெறுபேறுகள் இதில் உள்ளடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment