2021/09/29

அகதி குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம்!

 




ஹொங்கொங்கில் தனக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பதிற்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து எட்வேர்ட் ஸ்னோவ்டன் (Edward Snowden) மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“மிக நீண்ட நாட்களின் பின்னர் நான் கேள்விப்பட்ட மிகச்சிறந்த செய்தி இது. உங்கள் பலருடைய தாராள மனப்பான்மை இல்லாவிட்டால் இது சாத்தியமாகி இருக்காது. அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது என தெரிவிப்பதற்கு முன்னர் இன்னொரு நபரை நாங்கள் கொண்டுவரவேண்டும். ஆனால் இந்த விடயத்தை இதுவரை கொண்டு வந்தமைக்கு என்னால் உங்களிற்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியாது. இணைந்து நாங்கள் வெல்வோம்” என தெரிவித்துள்ளார். எட்வேர்ட் ஸ்னோவ்டன் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து மிகவும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.


இந்நிலையில், அவர் ஹொங்ஹொங்கிற்கு தப்பிச் சென்ற போது அவர் யார் என்றே தெரியாமல் இலங்கை அகதிகளான சுப்புன் கெல்லபத்த மற்றும் அவரது மனைவி அடைக்களம் கொடுத்தனர்.

சுப்புன் குடும்பத்தினர் ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் அச்சத்தின் பேரில், தமது சட்டத்தரணிகள் மூலம் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் நேற்றைய தினம் கனடாவில் குடியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

No comments:

Post a Comment