நடிகை ஜோதிகா இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
To the Queen of expressions, to the sensation of Tamil cinema, to the never aging beauty, #KTV takes immense pride in wishing actor #Jyothika a very Happy Birthday!#SocialKondattam #HBDJyothika #HappyBirthdayJyothika #HappyBirthday@Suriya_offl
267 people are talking about this
திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக மாறிய ஜோதிகா கிட்டத்தட்ட 6 வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இது அவருக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இது அவரது நடிப்புக்கு கடும் சவாலாக அமைந்தது. இப்படத்தின் மூலம், தான் ஒரு துணிச்சலான நடிகை என்பதை நிரூபித்தார்.
Tamil cinema's sunshine girl #Jyothika has evolved beautifully as an actor over the years. Here's wishing her a fantastic birthday and many more power-packed performances to go!#BMSMovies #HappyBirthdayJyothika
29 people are talking about this
ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு ஒரு நடிகைக்கு ரசிகர்கள் அவ்வளவு ஏலிதில் ஆதரவு அளிப்பதில்லை. அப்படியிருக்கும் போது ஜோதிகாவிற்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. 2ஆவது ஆட்டத்தில் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி அதில் நடித்து வந்தார். அப்படி நடித்து ஹிட் கொடுத்த படங்கள் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்களை குறிப்பிடலாம்.
#RadioCityChennai Wishing the queen of elegance #Jyothika A very Happy Birthday. Tune into #RadioCity and tune into our fav hits of #Jyothika on #Starexpress with @nancyshyla
ஜோதிகாவின் எதிர்கால முயற்சிகளுக்கு அவருக்கு அனைத்து வகையிலும் அன்பும், அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துவோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோதிகா..!
Posting as
No comments:
Post a Comment