உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எரிபொருள் தகனமே வெப்பநிலை அதிகரிப்புக்கு 100சதவீத காரணம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சூழல் மாறுபாடு தொடர்பான நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் வைத்தியர் பெட்ரிக் ஒடோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1980 - 2009 ஆண்டு காலப்பகுதியினுள் 14 நாட்களில் மாத்திரமே 50 அல்லது அதனை அண்மித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
எனினும், 2010 - 2019ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் 26 நாட்களில் உச்சளவான வெப்பநிலைகள் பதிவாகியுள்ளதுடன்,தற்போது, 40 நாட்கள் வரை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,தற்போது இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் 48 பாகை செல்சியஸுக்கும் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment