கடும் மழையைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, காலி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஹெலியகொட, குருவிட, கலவான, நிவிடிகல மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றுக்கு ஆரம்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நெலுவ, கேகாலை மாவட்டத்தில், யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொட்டபொல பகுதிகளுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment