பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு கோவிட்19 தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அட்டைகள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது 20 முதல் 29 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான எகிப்திய தூதுவர் உசேய் எல் சஹார்ட்டை இன்று சந்தித்த போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment