கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும்..
கத்திரிக்காய்
கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்
பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.
கரட்
கரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கரட்டை சாப்பிடும்போது, அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.
No comments:
Post a Comment