தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment