கிழக்கு மாகாணத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது.
மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் மிகக் குறைந்த கோவிட் நோயாளர்களாக 595 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 21 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். பணிப்பாளரை இன்றைய தினம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இது வரை 1,618,699 கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
முதலாவது தடுப்பூசி 874,447 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 744,252 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.
20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 284,990 பேருக்கும், 30 தொடக்கம் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் 629,933 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 138,417 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment