2021/09/29

10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலை! உலக உணவுத்திட்டத்தின் கணிப்பு வெளியானது...

 


ஆப்கானிஸ்தானில் பனிக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கு உள்ள 1.4 கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்படவுள்ளதாக உலக உணவுத்திட்டத்தின் கணிப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 சதவீத ஆப்கான் குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவைக்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கணக்குப்படி, 10 லட்சம் ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைமை உள்ளதாகவும் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து மலைப்பிரதேசங்கள் நிரம்பிய எல்லைப்பகுதியை கடந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  


No comments:

Post a Comment