தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவானது விஸ்வாசம் படம். இதில் அஜித்தின் மனைவியாக நயன்தாரா மற்றும் மகளாக அனிகா ஆகியோர் நடித்திருந்தனர். அப்பா - மகள் செண்டிமெண்ட்டை மையப்படுத்தி கதை இருந்ததால் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது இந்தப் படம்.
இந்நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தினை மூன்றாவது முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளனர். அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி உள்ளனர். #ViswasamTRPHuntOnSunTV என்ற ஹாஸ் டாக் ட்ரெண்ட் ஆனது.
இசையமைப்பாளர் டி.இமான் பதிவிட்டுள்ள ட்விட்டில் "விஸ்வாசம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும், அது புது பட ரிலீஸ் போலவே இருக்கிறது. அதற்கு அதிக அளவில் பாசிட்டிவ் மற்றும் அன்பு கிடைக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு பாடல் மற்றும் பிஜிஎம் ஆகியவற்றுக்கு அதிக பாராட்டு கிடைக்கிறது. இப்படி ஒரு படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சிவா சார், தயாரிப்பாளர் தியாகராஜன் சார், மற்றும் நம் டியர்
அஜித் சார் ஆகியோருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
மேலும் பாடலாசிரியர் அருண்பாரதி பதிவிட்டுள்ள ட்விட்டில் விஸ்வாசம் படம் தற்போது வெளியானது போல மக்கள் கொண்டாடுகிறார்கள் என வியந்து கூறியுள்ளார். "#விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விஸ்வாசம் படம் சமீபத்தில் மலேசியாவில் தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி உள்ளது. கொரோனா லாக் டவுனுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படம் வெளியிடப்பட்டு உள்ளது. அதையும் தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment