2020/06/20

இலங்கையில் FACEAPP உபயோகிப்போருக்கு கடும் எச்சரிக்கை...

இலங்கையில் FACEAPP உபயோகிப்போருக்கு கடும் எச்சரிக்கை!நாட்டில்  FACEAPP என்ற செயலியை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவினாலேயே இந்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


மேலும் இந்த எச்சரிக்கையில், இளமை பருவத்தில் இருப்பவர்களின் வயோதிப தோற்றம் எவ்வாறென்பதனை பார்ப்பதற்காக FACEAPP அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் தற்போது பயனாளர்களின் ஆண் மற்றும் பெண் தோற்றத்தை காட்டுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் FACEAPP செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செயலியில் முகத்தை பயன்படுத்துவதனால் பயனாளர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது முகத்தை அடையாளம் காண்பதென்பது ஒரு passwordஆக பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்பதனால் இரண்டாம் தரப்பினருடன் முகத்தை பகிர்வதற்கு தீர்மானிப்பதற்கு முன்னர் பயனாளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் தனிப்பட்ட பண்புகள் மற்றும் கொள்கைளை ஆராய்ந்து பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்வதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

Posting as விகடர் -VIKADAR-

No comments:

Post a Comment