2020/06/30

மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சைக் கருவுடன் முட்டையிடும் அதிசய கோழிகள்...


கேரளாவில் மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கருவுடன் கோழிகள் முட்டையிடுவது சமுகவலைதளவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிகாபுதீன். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது சமூகவலைதளப்பக்கத்தில் பச்சைக்கருவுடன் கொண்ட முட்டைகளின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தன் வீட்டில் உள்ள ஒரு கோழி இதுபோன்று முட்டையிட்டதாக குறிப்பிட்டிருந்தார்,

ஆனால், அதனை அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் சாப்பிடவில்லை எனவும் சில பச்சைக் கரு கொண்ட முட்டைகளை சமைக்காமல் விட்டதாகவும் அவை அனைத்தும் கோழிகளாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிசயமாக அந்த பச்சைக் கரு முட்டையில் இருந்து உருவான கோழிகள் அனைத்துமே பச்சைக் கரு முட்டைகளை இடுவதாகவும் சமூகவலைதளங்களில் அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார்.


அவரது பதிவை அடுத்து பலர் அவரிடம் சென்று பச்சைக் கரு முட்டைகளை கேட்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், கோழிகள் எதனால் பச்சை நிறக் கருவுடன் முட்டையிடுகின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துவருவதால் அவர்கள் இந்த முட்டை நல்லது என்று தெரிவித்தால் மட்டுமே அனைவருக்கும் அதனை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பச்சை நிறத்தில் கரு கொண்ட முட்டைகளை இடும் கோழிகள் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள் முன்வந்து அதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சி செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment