2019/08/22

கோவில்களில் மறந்து கூட செய்ய கூடாதவை...


=> கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.
=> அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.
=> குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.
=> கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது.
=> கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.
=> மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.
=> படிகளில் உட்காரக் கூடாது.
=>சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
=>வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.
=>மண் விளக்கு ஏற்றும் முன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.
=> கிரணம் இருக்கும் பொழுது கோயிலை வணங்கக் கூடாது.
=> தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
=> சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
=>தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
=>எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
=>கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. 

=> விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம். 

=>பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. 

=>கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.

=> புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டுகால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.


=> கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
=> கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற் புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது. 

=> கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது.

=> கோயிலில் தூங்கக் கூடாது.
=> கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்யக்கூடாது.
=> தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.
=> கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.
=> காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.
=> விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.
=> தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.
=>சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது. 

=>போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.

Posting as விகடர் -VIKADAR-

No comments:

Post a Comment