2018/11/03

கணபதி என்றிட கவலைகள் நீங்கும்



கணபதி என்றிட கலங்கும் வல்வினை
 கணபதி என்றிடகாலனும் கைதொழும் 
கணபதி என்றிட கருமம்  ஆதலால் 
கணபதி என்றிட கவலை தீரும் ...!


கணபதி என்றிட கவலைகள் பொடிபடும் என்பது பெரியோர்கள் திருவாக்கு. ஆமாம். விநாயகனே வெவ்வினையின் வேரறுக்க வல்லான். அவரே வேட்கை தணிவிப்பார். அவரே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாயகனாகத் திகழ்வதால், சிவனாருக்கு மூத்தப் பிள்ளையாம் பிள்ளையாரை அடிபணிந்து வணங்குவதன் மூலம் நம் கவலைகள் யாவையும் நம்மைவிட்டு விலகியோடும். 

நமது துன்பங்களுக்குக் காரணம் வினைதான். மற்ற மூர்த்திகள் வினைகளைத் தீர்க்கும். ஆனால், பிள்ளையார் வினைகளின் வேரையே களைந்தெறிவார். செடியை வெட்டினால் மீண்டும் வேரிலிருந்து செடி முளைக்கும். அதேபோல், வினைகளைக் களைந்தால் மீண்டும் வினை துளிர்க்கும். வேரை அகழ்ந்து எடுத்துவிட்டால் செடி முளைக்காது. அதுபோல், வினைகளின் வேரை அகழ்ந்து எடுக்கும் தெய்வம் பிள்ளையார். அவர் பிரணவ சொரூபமாகத் திகழ்பவர். பிரணவம் தோற்றம் இல்லாதது. பிள்ளையாரும் தோற்றம் இல்லாதவர். இங்கு தோற்றம் என்பது உற்பத்தியைக் குறிப்பது. அதாவது பிரணவத்தை போன்றே தோற்றமும் மறைவும் இல்லாத பரம்பொருள் பிள்ளையர் என்பது குறிப்பு. 

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்

  1. உச்சிட்ட கணபதி
  2. உத்தண்ட கணபதி
  3. ஊர்த்துவ கணபதி
  4. ஏகதந்த கணபதி
  5. ஏகாட்சர கணபதி
  6. ஏரம்ப கணபதி
  7. சக்தி கணபதி
  8. சங்கடஹர கணபதி
  9. சிங்க கணபதி
  10. சித்தி கணபதி
  11. சிருஷ்டி கணபதி
  12. தருண கணபதி
  13. திரயாக்ஷர கணபதி
  14. துண்டி கணபதி
  15. துர்க்கா கணபதி
  16. துவிமுக கணபதி
  17. துவிஜ கணபதி
  18. நிருத்த கணபதி
  19. பக்தி கணபதி
  20. பால கணபதி
  21. மஹா கணபதி
  22. மும்முக கணபதி
  23. யோக கணபதி
  24. ரணமோசன கணபதி
  25. லட்சுமி கணபதி
  26. வர கணபதி
  27. விக்ன கணபதி
  28. விஜய கணபதி
  29. வீர கணபதி
  30. ஹரித்திரா கணபதி
  31. க்ஷிப்ர கணபதி
  32. க்ஷிப்ரபிரசாத கணபதி




                                                  









No comments:

Post a Comment