இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு 7 விமான நிறுவனங்கள் தயாராக உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தற்போது வரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் விமான நிறுவனங்கள் இரண்டான AEROFOLT மற்றும் AZUR AIR, இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIR FRANCE விமான நிறுவனம் ஆகிய நிறுவனங்களே கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் US BANGLA AIRLINES நிறுவனம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான பயணங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும் சுவிட்ஸரலாந்தின் SWISS AIR விமான நிறுவனமும் இலங்கைக்கு நேரடி விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் குளிர் காலத்தில் ஐரோப்பாவை சேர்ந்த அதிக பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே இதன் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment