பிக் பாஸ் 3 வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேரன் வெளியேற்றப்பட்டார். சேரனை வெளியேற்றினால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவோம் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இன்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
தலை வணங்கி நிற்கிறேன்..
எனது 91 நாட்கள் பிக் பாஸ் பயணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.
2,457 people are talking about this
சேரனின் ட்வீட்டை பார்த்த அவரின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
போலி லோஸ்லியாவை நம்ப வேண்டாம். உங்களின் உண்மையான அன்பை பெற அவர் தகுதியற்றவர். அவர் தந்தை-மகள் உறவை தனக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொண்டார். தயவு செய்து அந்த பெண்ணை நம்பாதீர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு லோஸ்லியா உங்களை சேரப்பா என்று அழைத்து பார்க்க வந்தால் அதை தவிர்க்கவும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேரன் அநியாத்திற்கு நல்லவராக இருந்ததால் தான் வெளியேற்றப்பட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் நல்லவராக இருக்கவே கூடாது என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கவின்-லோஸ்லியா ஆதரவாளர்களோ சேரன் நல்லவர் போன்று நடித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Posting as
No comments:
Post a Comment