ரீங்............ரிங்.......... வீட்டில் தொலைபேசி அழைப்பு மணி அடிக்கின்றது.
அழைப்பை தொடர்ந்த தாய் ஹலோ யாரு பேசுறது....அம்மா நான் வரும் விடுமுறை தினத்தன்று நான் என்னுடைய மனைவி பிள்ளைகள் வந்து உங்களை பார்க்க இருக்கின்றோம்.அம்மாவின் மனது ஆனந்தத்தில் பொங்கியது. மகன் உனக்கு எவ்வளவு வயதாகி உனக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் நீ எனக்கு மகனல்லவா என்ற சந்தோஷம் அம்மாவுக்கு.
மகன் வரும் விடுமுறை தினத்துக்காக காத்திருந்து வீட்டை அழகு படுத்தி மகனுக்கு என்ன விருப்பம் என்ன சாப்பிட ஆசைப்படுவான்.என்றெல்லாம் இரவு முழுக்க யோசித்து யோசித்து தூங்காமல் இருந்தாங்க அம்மா.
நாளை விடுமுறை என்னுடைய மகன் வருவான் அவனுக்கு ஆசையாசையாக என்னால் முடிந்த அளவுக்கு தீன்பண்டங்களை சமைக்கவும் தயாராகி வைத்தார்கள்.காலையில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முட்டித்து விட்டு வாசலிலே மகன் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்க மகன் குடும்பத்தினர் வாகனத்தில் வந்து இறங்குவதைகண்டு பெரும் சந்தோசத்துடன் வரவேற்றாங்க வாங்க வாங்க யே இவ்வளவு லேட் என்று..
வீட்டுக்குள் சென்றது முதலில் தேநீர் உபசாரம் நடாத்தினார்கள்.பேரக்குழந்தைகளை கட்டித்தழுவி முத்தம் கொடுத்தார்கள் அம்மா. இதை பார்த்து சந்தோஷம் மகனுக்கும்.வீட்டுக்குள்ளே எவ்வளவு ஆனந்தம் சந்தோஷம் பகல் உணவு இப்படி இவைகள் எல்லாம் அருமையாக நடைபெற்றதுஅம்மாவின் அன்றையதினம் சமையல் அறையிலே சென்றுகொண்டிருந்தது.பாவம்
மருமகளோ விருந்தாளியைப்போல் மாமிக்கு ஒத்தாசையாக எதுவும் இல்லை அயலவர்களை கண்டு கதைப்பதும் நலம் விசாரிப்பதும் அடிக்கடி தன்னை அலங்காரம் செய்து கொள்வதுமாக இருந்தது.பேரக்குழந்தைகள் வீடையே தலை கீழாக புரட்டுவது போல் அங்கும் இங்கும் சந்தோஷமாகவும் அடித்திரிந்தார்கள். பேரக்குழந்தைகள் கூட சரி கொஞ்சம் நேரம் உக்கார்ந்து இருந்து பேச ஆசை இருந்தும் சமையல் அரை வேலைகாரணமாக முடியாது போகின்றது அம்மாவுக்கு. மனதுக்குள் ஏக்கத்துடன்.
அடிகடி உம்மா வந்து மகனை எட்டிப்பார்த்து விட்டு செல்கின்றார்கள். மகன் என்னுடன் இப்ப பேசுவான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பேசுவான் சமையல் அறைக்கு வந்து சரி என்கூட பேசுவான் என்று.மகனோ எதையுமே கண்டுகொள்ள வில்லை அதற்கொல்லாம் மகனுக்கு நேரமுமில்லை காரணம் மகனின் கையில் இருக்கும் மகன் கையை அடக்கி வைத்திருக்கும் மகனின் கையடக்கு தொலைபேசி மகனின் கையை மட்டுமல்ல உள்ளதையும் வாயையும் அடக்கி விட்டது..குனிந்த தலை கூட நிமிராமல் ஓயாமல் தன்னுடைய mobile phone இனிலே அம்மா வீட்டில் காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றான்.இப்படி எத்தனையோ மகன்.
எதையுமே கண்டுகொள்ளாமல் உம்மா மனதுடைந்து மீண்டும் சமையல் அறைக்கே சென்று தன்னுடைய வேளையில் ஈடு படுகின்றார்கள்.அம்மா எவ்வளவு கனவுகளுடன் காத்திருந்தார்கள் என்பதை சொல்லவா போகின்றார்கள்.ஒரு போதும் இல்லை.
வயதான அம்மாவிடம்
அம்மா நீங்க எப்படி இருக்கீங்க
சாப்பிட்டிங்களா உங்கள் உடல் நிலைகள் எப்படி மருந்து மாத்திரைகள் இருக்கா உங்களுக்கு என்ன வேண்டு. இப்படியெல்லாம் கேக்கத் தோன்றாத எத்தனையோ மகன்மார்கள் இருகின்றார்கள்.
உம்மா பக்கத்தில் உக்கார்ந்து ஒரு வார்த்தை கூட பேசாத எத்தனையோ மகன்கள் இருகின்றார்கள்.
ஒரு நாள் உங்கள் mobile phone power off செய்து விட்டு
தன்னை பெற்றெடுத்த தாய் வீட்டுக்கு சென்ற அந்த ஒரு நாளைக்கு சரி தன் தாய் வீட்டில் எல்லோருடனும் சந்தோஷமாக ஒருநாள் இருந்து பாருங்கள் பார்க்கலாம்.
Posting as
No comments:
Post a Comment