தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் பகுதியிலுள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில், தளபதி விஜய் தனது மனைவி, அப்பா, அம்மா ஆகியோருடன் கலந்து கொண்டார். படக்குழுவினருடன் தளபதி 64 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டார்.
பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டு அவர் பேசுவது இல்லை. அவரது நிகழ்ச்சியில் பேசாமல் இருந்ததும் இல்லை. கோடான கோடி ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு தவம் இருக்கின்றனர். அவரது பேச்சில், அரசியலும் இருக்கும். அந்த வகையில், இன்றைய விழாவில் பேசிய தளபதி கூறுகையில்,
பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டு அவர் பேசுவது இல்லை. அவரது நிகழ்ச்சியில் பேசாமல் இருந்ததும் இல்லை. கோடான கோடி ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு தவம் இருக்கின்றனர். அவரது பேச்சில், அரசியலும் இருக்கும். அந்த வகையில், இன்றைய விழாவில் பேசிய தளபதி கூறுகையில்,
- வாழ்க்கையில் ஜெயித்த நயன்தாரா இருக்கிறதும் சந்தோஷம்தான்.
- விவேக்கின் மரக்கன்றுகள் நடும் முயற்சிக்கு பாராட்டு.
- வேற லெவல் நீங்க…வேற லெவல் என்று ரசிகர்களின் உற்சாகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.
- யோகி பாபு அவர் கட்டிய புதிய வீட்டின் கிரகபிரவேசத்தில் கலந்து கொள்ளவில்லை.
- ஆனால், அவரது திருமணத்தை தவறவிடக்கூடாது என்றார்.
- கால்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிட்டார்.
- சுடச்சுட ஆவி பறக்கணும். அது இட்லி ஆனாலும் சரி, அட்லி ஆனாலும் சரி என்று கூறி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
- வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நாம் கோல் போட முயற்சிக்கும் போது, அதனை தடுப்பதற்கு ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்கிறவனே சேம் சைடுல கோல் போடுவான்.
- யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- இதனை பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
மேலும், பேசிய அவர், வெறித்தனம் பாடலுக்காக நான் பாடியவற்றை ஏஆர் ரஹ்மானுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது அவர், மும்பையில் இருந்தார். ஆனால், அவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று நினைத்தேன். அதன் பிறகு உடனடியாக அட்லி என்னிடம், ஏ.ஆர். ரஹ்மான் என்னை ரெக்கார்டிங் செய்வதற்கு அழைப்பதாக குறிப்பிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது, அட்லிதான் என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆன்லைனில் கிண்டலிக்கும் போதும், விமர்சனம் செய்யும் போது எல்லை மீறக்கூடாது. அப்படி மீறினால், அது அடுத்தவர்களை காயப்படுத்தும். எதிர்மறையானது எப்போதும் வேடிக்கையாகவே இருந்தால் பரவாயில்லை. அது எல்லை மீறும் போது தவறாக உணரப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி சீட்டுடன் வருகை தந்தவர்களுக்கு படக்குழு சார்பில் பிகில் மற்றும் டிசர்ட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிகில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினருக்கு பிகில் என்று அச்சிடப்பட்ட தங்க மோதிரம் மற்றும் விஜய் கையெழுத்திட்ட கால்பந்து (பெண்களுக்கு) பரிசாக வழங்கப்பட்டது. இதனை விஜய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posting as
No comments:
Post a Comment