ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தத் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளாகிய தேர் உற்சவம் இன்று காலை இடம்பெற்றது.இன்று காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் முருகப் பெருமானின் அருள்பெற யாழ். நோக்கி படையெடுத்துள்ளனர்.அதுமட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிர்களும் கந்தனின் அருளைப்பெற கடல் கடந்து வந்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 6ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.அதனைத் தொடர்ந்து 25 நாட்கள் பல்வேறு திருவிழாக்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து நாளை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posting as
No comments:
Post a Comment