2019/07/18

பிகில் பட பாடல் லீக் ................ கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்!

பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் கசிந்ததாக தகவல் பரவி வருகிறது.


Image result for bigil

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனது, படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து அட்லீ - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

அட்லி படம் என்றால் எதாவது ஒரு படத்தின் சாயல் நிச்சயமாக இருக்கும் என்று அதை கண்டு பிடிக்கும் முனைப்பில் இருப்பார்கள் ரசிகர்கள். இந்த சிக்கல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஏ ஆர் ரகுமான் பிகில் படத்திற்காக இசையமைத்த ஒரு பாடல் இணையத்தில் கசிந்ததை நினைத்து குழம்பியுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் நேற்று இணையத்தில் கசிந்தது. விஜய் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாடல் எப்படி இணையத்தில் உலாவந்தது என்பது குறித்து படக்குழு விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் இப்போது ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இணையத்தில் கசிந்துள்ளதாக ரசிகர்கள் அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். 15 வினாடிகள் கொண்ட அந்த இசைத்துணுக்கில் விஜய் குரல் இருப்பதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். விஜய்யின் தீவிர ரசிகர்கள் படத்தாயாரிப்பு நிறுவனம் மிகவும் பொறுப்பற்ற தனமையாக இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். தொடர்ச்சியாக விஜய் படத்தின் இரண்டு பாடல்கள் லீக் ஆகியிருப்பது சினிமா உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Image result for bigil



No comments:

Post a Comment