உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு எவ்வளவு பரிசு வழங்கப்படுகிறது தெரியுமா?
உலககோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை நடக்கிறது. அரையிறுதி போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்திய அணி உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய வருத்தமான செய்தி நாம் எல்லோருக்கும் தெரியும். நாளை நடக்கவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் மோதுகின்றன.
இந்த செய்தியில் நாம் இந்த உலககோப்பையில் பங்கேற்ற அணிகள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என பார்க்கலாம்.
உலககோப்பையைில் வெற்றி பெரும் அணிக்கு தங்கத்தால் ஆன உலககோப்பை மற்றும் அணிக்கு மொத்தமாக 4 மில்லியன் டாலரும் பரிசாக வழங்கப்படும் அதன் இந்திய மதிப்பில் சுமார் ரூ27.42 கோடி. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். அதன் இந்திய மதிப்பு ரூ13.71 கோடி
அரையிறுதி போட்டிக்கு வந்து வெளியேறிய அணிக்கு 8 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ5.48 கோடி பரிசாக வழங்கப்படும். இது போக லீக் போட்டிகளில் ஒவ்வொரு வெற்றி பெரும் அணிக்கும் 40 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.74 கோடி வழங்கப்படும்.
இது போக லீக் போட்டியில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு அணிக்கும் தலா 1 லட்சம் டாலர் போனஸாக வழங்கப்படும். அதன் இந்திய மதிப்பு ரூ6.85 கோடி
இந்திய அணியை பொருத்தவரை இந்த உலககோப்பை தொடரில் மொத்தம் 7 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக மொத்தம் 2.8 லட்சம் டாலர் இந்திய மதிப்பில் ரூ1.91 கோடி கிடைத்துள்ளது.
இது போக அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் போனஸ் 1 லட்சம் டாலர் மற்றும் அரையிறுதிலேயே வெளியேறியதால் வெறும் 8 லட்சம் டாலர் என மொத்தம் 9 லட்சம் டாலர் பரிசாக பெற்றது அதன் மதிப்பு ரூ 6.1 கோடியாகும். லீக் போட்டியில் பெற்ற ரூ 1.91 கோடி மற்றும் அரையிறுதியில் பெற்ற தொகையை சேர்த்து ரூ 8.01 கோடியை மொத்தம் பரிசாக பெற்றுள்ளது இந்திய அணி.
No comments:
Post a Comment