2019/07/19

சினிமா விமர்சனம் -கடாரம் கொண்டான்-

Image result for கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்

போலீஸ் திருடன் விளையாட்டில் போலீஸ் யார், திருடன் யார் எனும் களம் மாறுவது தான் கடாரம் கொண்டான்


அடிபட்டு ஹாஸ்பிடல் வருகிறான் ஒரு குற்றவாளி. அங்கு  வேலை பார்க்கும் டாக்டரின் மனைவியை கடத்தி  அந்த  குற்றவாளியை  வெளியே   அழைத்து வரச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அந்த குற்றவாளியை கொல்ல ஒரு கும்பல் சுத்துகிறது. இன்னொரு பக்கம் போலீஸ்  துரத்துகிறது. இதன் பின்னணியில் என்ன  நடந்தது.  அந்த   டாக்டரின்     மனைவி  காப்பாற்றப்பட்டாரா?  அந்த குற்றவாளியும், டாக்டரும் தப்பித்தார்களா? என்பது தான் கதை. 


கடாரம் கொண்டான்

 2010 ல்     வெளிவந்த    ஸ்பானிஷ்     திரைப்படம்    Point blank.     இப்படத்தின் அதிகாரப்பூர்வ    ரீமேக்காக    வந்திருக்கிறது கடாரம் கொண்டான்.  கதை, திரைக்கதையில்     எந்த   பெரிய   மாற்றங்களும் இல்லை. அதுவே  பெரும் ஆறுதல். Point blank சீட்    எட்ஜ் திரில்லர்      வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்பு ஆரம்பித்து விடுகிறது. படத்தை   தமிழுக்கு   மாற்றியதில்   அதன் பின்னணியை மலேசியாவுக்கு மாற்றியது   நல்ல    ஐடியா.    கதையின்  தன்மை     அடித்தட்டு ரசிகனுக்கு புரியாமல் போய்விடும் அபாயம் அதிகம் இருக்கிறது. 

படத்தை தமிழில் மேம்படுத்துகிறேன் பேர்வழி என எந்தக் கோக்கு  மாக்கும் செய்யாமல் எடுத்ததே ஒரு பரபர திரில்லர் அனுபவத்தை தருகிறது. ஆனால், படத்தில் பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள். ஊர் முழுவதும் தேடப்படும் குற்றவாளி         போலீஸ்     நிலையத்திற்குள்        சாதரணமாக          நுழைவது எப்படி? விக்ரம் உண்மையில் யார்? அவர் என்ன தான் செய்கிறார்? பயணமே செய்யக்கூடாத கர்ப்பிணி   10 நாட்கள் முன் தான் மலேசியா வந்திருக்கிறார் எப்படி?   என பல   கேள்விகளுக்கு     படத்தில் விடையில்லை. கேரக்டர்களின் பின்னணி சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. 

விக்ரம்
 உணர்வுகளை     முழுமையாக       கடத்தும்.      கடாரம்     கொண்டானில் அது மிஸ்ஸிங். முழுமையாக எந்த கேரக்டர்களின் உணர்வுகளும் கடத்தப்படாமல் படம் மட்டும் ஆக்‌ஷன் அதகளமாக இருப்பது பார்வையாளர்களை குழப்பும். ஆக்சன் விரும்பிகள் மட்டும் ரசிப்பார்கள். 

விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டைலீஷ் ஆக்‌ஷனில் கலக்கியிருக்கிறார். பாதி நேரங்களில் டயலாக்கை கண்களில் பேசிவிடுகிறார். அக்‌ஷரா ஹாசன் தன்      பாத்திரத்தை       அழகாக செய்துள்ளார்.   அபி இதில் மிக முக்கியமான பாத்திரம்.     ஆனால் அவரிடம் நிறைய    தடுமாற்றம் இருக்கிறது. சரிசெய்து கொள்வது அடுத்த படங்களில் உதவும். 

இயக்கம்  ராஜேஷ் எம்      செல்வா அவர்     இயக்கிய முதல்     படத்தில் கமல் ஹாசன்இரண்டாவதில் விக்ரம். இரண்டுமே  ஆக்‌ஷன்     தழுவல்கள். இந்தப் படத்தில் நிறைய இடங்களில்     இருக்கும்    லாஜிக் ஓட்டைகளை சரி செய்து, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தமிழுக்கு எனும் போது    தமிழின்    அனைத்து   ரசிகர்களுக்கும் ஏற்றவாறு செய்திருக்கலாம். இரண்டு படங்களிலும் தெரியும் எலைட் தன்மை அடிமட்ட ரசிகனை அந்நியப்படுத்தும். 

அடுத்த படத்தில்     சரி    செய்து      கொள்வாராக! ஜிப்ரான் வழக்கம் போல் கலக்கியிருக்கிறார்   . படத்தின்     பி ஜி எம் மே        அவர் பெயரை அழுத்திச் சொல்கிறது. பிரவீன் கே எல் எடிட்டிங் தேவையானவற்றை கூட கட் செய்து ஓடுகிறது. ஏன் இந்த அவசரம் எனக் கேட்க தோணுகிறது. ஶ்ரீனிவாஸ் கேமரா ஆகஷன் காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுக்க ஓடியிருக்கிறது. ஆக்‌ஷன் படம் ஆனால் எந்த ஒரு ஆக்‌ஷன் காட்சியும் மனதில் நிற்கவில்லை. முழுமையான திருப்தி தராத ஆக்சன் திரில்லர் தான் கடாரம் கொண்டான். 

No comments:

Post a Comment