2019/07/14

இறுதி போட்டி மைதானத்துக்கு பறந்து வந்த பந்து.........





இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனல் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தை ரெட் டெவில்ஸ் பாராசூட் மூலம் பறந்து வந்து அம்பயரிடம் கொடுத்துச் சென்றனர்.



இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனலுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் கிரிக்கெட் அரங்கில் 23 ஆண்டுகளுக்கு பின் புது உலக சாம்பியனை பார்க்கலாம்.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்நிலையில் ஃபைனல் போட்டியில் பயன்படுத்தப்படும் போட்டிக்கான பந்தை இங்கிலாந்து ஆர்மியின் வான்வழி பிரிவான ரெட் டெவில்ஸ், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து பாராசூட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தரையிறங்கி, அம்பயர்களிடம் கொடுத்தனர். 

இவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து தரையிறங்கும் போது, சிவப்பு நிற புகையை வெளியேற்றிக்கொண்டே தரையிறங்கியது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பிரிட்டன் ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவின் ஒரு பிரிவு வீரர்கள் தான் இந்த ரெட் டெவில்ஸ். 

கடந்த 1941ல் இரண்டாம் உலகக்போரின் போது, இந்த ரெட் டெவில்ஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. முதல் ஏர்பார்ன் டிவிசன் என்பது தான் இந்த பிரிவின் பெயர். ஆனால் இந்த பிரிவை ரெட் டெவில்ஸ் என்ற புனைப்பெயரிலும் அழைக்கின்றனர். 


No comments:

Post a Comment