2019/07/13

புது உலக சாம்பியன் யார்? அதிகரிக்கும் பரபரப்பு.........


எந்த அணி வெற்றி பெற்றாலும் முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும்



இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனலுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்ற்றும். 


யாருக்கு சாதகம்: 
நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில், பலமான இந்திய அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதே போல, இங்கிலாந்து அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. 

அதிகரிக்கும் பரபரப்பு: 
இதனால் புது சாம்பியனாகக்போவது யார் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளும் முன்னதாக ஃபைனல் வரை சென்று கோப்பை வெல்லாமல் தோல்வியடைந்து வெளியேறியதால், கோப்பையை கைப்பற்ற அதிகம் போராடும். 

No comments:

Post a Comment