2018/12/04

2.0 விமர்சனம்





தன் சபல புத்தியால், அழிவு சக்தியாக மாறிய எந்திர மனிதன் சிட்டியை "எந்திரன்" படத்தில் பார்ட் பார்ட்டாக கழற்றிப் போட்ட டாக்டர் வசீகரன் ., எந்திரனின் பகுதி இரண்டான 2.0 வில் ஆக்க சக்திக்காக சிட்டியை மீண்டும் உருவாக்கி, சிட்டுகுருவிகளின் அழிவுக்கு, செல்போன்களும் அதை பயன்படுத்தும் மனித குலமும் தான் காரணம்... என செல்போன்களையும், மனித குலத்தையும், அழிக்க முற்படும் வில்லனையும் அவனது ஆட்களையும் அழித்தொழிக்கும் கருவே "2.0" படக்கரு. 



இன்றைய அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அதி பயங்கரமான பயமுறுத்தலுடன் கூடிய பேரழிவுக்குப்பின், அரசாங்கம், அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடி தீர்வு காண களம் இறங்குகிறது. 

பிரபல சைன்டீஸ் டாக்டர் வசீகரன் - ரஜினி, இதற்கு தீர்வு காண, தனது "எந்திரன்" படைப்பான சிட்டியால் தான் முடியும் எனக் கருதி, அன்று, "எந்திரனி"ல் அழிவு சக்தி பின்னால் போனதால், பிளேட் பிளேட்டாக தான், கழற்றிப் போட்ட "எந்திரன்" சிட்டியை "ஆக்க சக்திக்கு உதவு... "என புத்தி புகட்டி மீண்டும் சர்வ வல்லமை பொருந்திய எந்திர மனிதனாக உருவாக்கி உலாவ விடுகிறார். கூடவே, அந்த அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்ட அதி பயங்கர பயமுறுத்தலுக்கு காரணம், இறந்து போன அக்ஷய் குமாரின் ஆரா எனப்படும் நெகடீவ்தாட்ஸ் தான் என்று கண்டுபிடிப்பதோடு, அக்ஷயும் 1996 க்குப் பிறகு சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் சட்டத்தின் கண்களில் மண்னை தூவிவிட்டு செயல்பட வைக்கப்படும் செல்போன் டவர்களின் கதிர்வீச்சு என்பதால் செல்போன்களையும், செல்போன் பயன்படுத்தும் மனிதர்களையும் அழித்து ஒழிக்க முற்படுகிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார். 

டாக்டர் வசீகரனின், அந்த ரீமாடல் ரோபோ சிட்டி - ரஜினி, அறிவியலுக்கு அப்பாற்பட்ட பேரழிவுக்கு காரணமான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இன வளர்ப்பு பிரியர் வில்லன் டாக்டர் ரிச்சர்டு -அக்ஷய் குமாரை, டாக்டர் வசீகரன் - ரஜினியின் புதிய பெண் ரோபோ படைப்பான எமி ஜாக்சனுடன் சேர்ந்து, எப்படி? வீழ்த்தி.... மனித உலகத்தை காப்பாற்றுகின்றனர்...? என்பது தான் "2.0 " கதை



 



இயக்குனர் எஸ்.ஷங்கர், எழுத்தாளர் பி.ஜெயமோகன், எழுத்துக்களில் உள்ள வசீகரம் காட்சிகளாகவும் கவர முற்பட்டுள்ளன பாராட்டுக்கள். ஆண்டனியின் படத்தொகுப்பில் படத்தின் பிரமாண்டம் பிரேம் டூ பிரேம் தெரிகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அதே ப்ரேம்கள் காட்சிக்கு காட்சி மிளிர்கின்றன. ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் மதன் கார்கியும், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரும் எழுதிய "ராஜாளி ...", "புலி நாங்கள்.. ", "எந்திரலோகத்து சுந்தரியே ...." உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டுள்ள விதமும் வசீகரம். ஆனால், படம் முடிந்த பின் புரமோஷன் சாங்காக " எ.சுந்தரியே..." பாடல் ஒலி-ஒளிப்பது வருத்தம். ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் பிரமாண்டம் கொடுக்கும் பிரமாதம். 

மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், ரசிகர்களைக் காட்டிலும், சிறுவர் சிறுமியருக்கும் பிடிக்கும் வகையில் பிரமாண்டத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் "2.0 "ஆஹா, ஒஹோ இல்லை என்றாலும் ரொம்ப சுமாரும் இல்லை... என்பது ஆறுதல்! 

விகடர் -VIKADAR- 





No comments:

Post a Comment